கோயம்புத்தூர்

என்.எல்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான மகளிர் தடகளப் போட்டி

மேட்டுபாளையம் என்.எல்.பி. பாலிடெக்னிக் கல்லூரி, நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து

DIN

மேட்டுபாளையம் என்.எல்.பி. பாலிடெக்னிக் கல்லூரி, நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து 4ஆம் ஆண்டாக மகளிருக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்தின.
என்எல்பி கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட அளவில் 30-க்கும்  மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் அன்னுர் செயின்ட் மேரீஸ் பள்ளி 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. ஆலாங்கொம்பு  எஸ்.எஸ்.வி.எம். பள்ளி 51 புள்ளிகள் பெற்று 2 ஆம் இடம் பெற்றது. 
தனி நபர்  புள்ளிகள் அடிப்படையில் 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவி கே.பி நேஷிகா, 12 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் விஜயலட்சுமி பள்ளி மாணவி ஆர்.புவனிஷா, செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி ஆர். கவிந்த்ரா, 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவி எஸ்.பூந்தளிர், 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவி டி.அபிஸ்ரீ முதலிடம் பிடித்தனர். பரிசளிப்பு விழாவுக்கு நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் கார்த்திக் வரவேற்றார். தலைவர் மகேஷ் குமார், துணைத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாலமுரளி ஆகியோர் வெற்றிபெற்ற  மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். முடிவில் இணைச் செயலாளர் கல்யாண்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT