கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி  கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

DIN

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். 
கோவை, சூலூர் அருகே கரவழிமாதப்பூரைப் சேர்ந்த ராமசாமி மகன் பிரசாந்த் (19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கணியூர் பொண்ணாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோடீஸ்வரன் (19). இவர் அதே கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு கணினி மென்பொருள்துறையில் படித்து வந்தார். 
இவர்கள் இருவரும் 15 மாணவர்களுடன் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினாபாளையத்தில் உள்ள நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றில் குளிக்க வெள்ளிக்கிழமை வந்துள்ளனர்.  இவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 
இந்த திடீர் வெள்ளத்தில் பிரசாந்த், கோடீஸ்வரன் ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உடன் இருந்த மாணவர்கள் இவர்களைக் காப்பற்ற முயன்றனர். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 
இதையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் கோடீஸ்வரன் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. பிரசாந்த் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிறுமுகை போலீஸார், உயிரிழந்த கோடீஸ்வரன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT