கோயம்புத்தூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம், ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 

DIN

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம், ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
சேலம் மாவட்டம், தாதகாபட்டி அருகே உள்ள பொம்மன்ன செட்டிக் காட்டைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (26). இவருக்கு நண்பர் ஒருவர் மூலமாக சரவணம்பட்டியைச் சேர்ந்த மார்கோஸிஸ் நவமணி என்பவர் அறிமுகமானார். இவர்  ஹாங்காங்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜானகிராமனிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்  பெற்றுள்ளார். 
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து கோவை மாநகரக் குற்றப்பிரிவு போலீஸில் ஜானகிராமன் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய 
விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ. 5 லட்சம் பெற்று மார்கோஸிஸ் நவமணி ஏமாற்றியது தெரிய வந்தது. 
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த மார்கோஸிஸ் நவமணியை தேடி வந்தனர். இந்நிலையில் கோவையில் வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT