கோயம்புத்தூர்

வால்பாறை சாலையில் வரையாடு உயிரிழப்பு

DIN

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரத்தில் வரையாடு உயிரிழந்துள்ளது.                
  தமிழகத்தின் மாநில விலங்காக நீலகிரிதார் எனப்படும் வரையாடு உள்ளது. வரையாடுகளை பொருத்தவரை மிகவும் உயரமான பாறைகளில் வாழும் உயிரினம். மனிதர்கள் வரையாட்டை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 7, 8, 9 ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரத்தில் வரையாடுகள் எப்போதும் தென்படும். இதனால், வரையாடுகள் தென்படும் பகுதிகளில் வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஆண் வரையாடு ஒன்று  செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தது. இரண்டு வரையாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வரையாடு உயிரிழந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT