கோயம்புத்தூர்

சோலையாறு அணையின் நீர்மட்டம்:  ஒரே நாளில் 2 அடி உயர்வு

DIN

வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
ஆழியாறு - பரம்பிக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படுவது வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை. 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் ஆறுகள் அனைத்தும் வறண்டு, சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடியாக குறைந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த திங்கள்கிழமை 16 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து தற்போது 19.48 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT