கோயம்புத்தூர்

தண்ணீர் வரத்து இல்லாததால் குரங்கு அருவி மூடல்

DIN

ஆழியாறு அருகே உள்ள அடுத்த குரங்கு அருவிக்கு வரும் தண்ணீரின் வரத்து குறைந்ததால் திங்கள்கிழமை முதல் மூடப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.
 கோவை மாவட்டம், ஆழியாறு அணை குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்கின்றனர்.  கடந்த ஆண்டுபெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குரங்கு அருவிக்கு வரும் நீர் வரத்து கடந்த சில நாள்களாகவே குறைந்து காணப்பட்டது. தற்போது, மீண்டும் நீர் வரத்து குறைந்ததால் குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மீண்டும் மழை பெய்து நீர்வரத்து ஏற்படும் வரையில் குரங்கு அருவி மூடப்பட்டு இருக்கும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT