கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 65 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

DIN

திண்டுக்கல்லில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 65 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மூன்று பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.
 திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார், திருச்சி சாலை கம்போடியா மில் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவர்களிடம் ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள 65 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 
 இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருதகோட்டை (40), பால்பாண்டி (34), வேல்முருகன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT