கோயம்புத்தூர்

ஆம்னி பேருந்தில் 150 கிலோ குட்கா பறிமுதல்

DIN

பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ எடையுள்ள குட்கா பொருள்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். ஆம்னி பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காந்திபுரம், நவ இந்தியா, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழு கோவைக்கு வரும் ஆம்னி பேருந்துகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, பெங்களூருவில் இருந்து கோவைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 3 மூட்டைகளில் 150 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

கோவைக்கு கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்து, லாரிகளைச் சோதனையிட திட்டமிட்டோம். தனியார் பேருந்து ஒன்றில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே வைத்து கடத்தப்பட்ட குட்கா மூட்டைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.  கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம். கடத்தி வந்த பேருந்தையும் பறிமுதல் செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT