கோயம்புத்தூர்

அரசு இசைக் கல்லூரியில் மாணவர்  சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம்

DIN

கோவை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் ஏ.வி.எஸ்.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை, மலுமிச்சம்பட்டியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள் உள்ளன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவில் பட்டப்படிப்பு பயில பிளஸ் 2 தேர்ச்சியுடன், 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 
வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய பரிவுகளில் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 16 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு பி.ஏ. இளங்கலை இசை அல்லது இசைக் கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட இசைப்பிரிவில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
 மாலைநேர வகுப்பில் குரலிசை, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறுவதற்கு ரூ.31 அஞ்சல் ஆணை பெற்றுவர வேண்டும். பி.ஏ.இளங்கலை இசைக்கு ரூ.1,460, பட்டயப் படிப்புக்கு ரூ.750, இசை ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.750, மாலைநேர இசை வகுப்புக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0422-2611196 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT