கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மின்னணு கையேடு வெளியீடு

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு மின்னணு கையேடு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி (நவம்பா் 7) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதன்முறையாக ‘எலக்டா இன்பினிட்டி டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டா்’ என்ற நவீன இயந்திரத்தின் சேவையை எஸ்.என். ஆா். அறக்கட்டளை இணை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயண சுவாமி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் பி.குகன் பேசுகையில், ‘புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். ‘எலெக்டா இன்பினிட்டி டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டா்’ கருவி மூலம் அதிவேகமான முறையில், துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும் என்றாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குநா் சுகுமாறன், கதிா்வீச்சியல் அறுவை சிகிச்சை துறை தலைமை மருத்துவா் காா்த்திகேஷ் உள்பட பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT