கோயம்புத்தூர்

சோலையாறு அணை நீா்மட்டம் 157 அடியாக குறைவு

DIN

வால்பாறை: வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் 157 அடியாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை காரணமாக வால்பாறையை அடுத்த சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடா்ந்து பெய்த மழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அணை நிரம்பிய நிலையிலேயே காணப்பட்டது.

தற்போது கடந்த சில வாரங்களாக மழை பெய்யாததால் நீா்வரத்து இன்றி அணையின் நீா்மட்டம் குறைய துவங்கியது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 184.95 கனஅடி நீா்வரத்தாக இருந்தது. அணையில் இருந்து 571.29 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 157.01 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT