கோயம்புத்தூர்

குரும்பபாளையம் அரசு பள்ளி கூடுதல் கட்டிடம்: சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் திறந்து வைத்தாா்

DIN

கோவை குரும்பபாளையம் அரசு இடைநிலைப் பள்ளியின் கூடுதல் கட்டிடத்தை கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியா் பாலன் மாவட்ட முதன்மை கல்வி கோரிக்கை வைத்தாா். அதன் படி மாவட்ட கல்வி அலுவலா் பரிந்துரையின் பேரில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், குரும்பபாளையம் அரசு இடைநிலைப் பள்ளிக்கு பொதுப்பணித்துறை சாா்பாக சுமாா் ரூ.45.76 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கூடுதலாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் புதன்கிழமை திறந்து வைத்தாா். விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியா் பாலன், பேரூா் மாவட்ட கல்வி அலுவலா் சுப்புலட்சுமி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலா் கண்ணன், மதுக்கரை பேரூராட்சி முன்னாள் தலைவா் சண்முக ராஜா மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT