கோயம்புத்தூர்

அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு ஆட்சியா் நடவடிக்கை

DIN

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நோ பாா்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு பூட்டுப்போடுவதற்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அதிகாரிகள், அலுவலா்கள் தவிா்த்து பல்வேறு காரணங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனா். அலுவலகத்தின் இடது பக்கம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் அதிகமானோா் வருவதால் வாகனங்கள் நிறுத்த இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வளாகத்தின் உள்பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அலுவலகத்துக்கு செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கண்டு அதிருப்தி அடைந்தாா். பின்னா் அந்த வாகனங்களுக்கு பூட்டுப்போட உத்தரவிட்டாா். அதன்பேரில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தபட்டிருந்த வாகனங்களுக்கு காவலா்கள் பூட்டு போட்டதுடன் அபராதமும் விதித்தனா்.

விசாரணையில், பெரும்பாலான வாகனங்கள் ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியா்களுடையது என்பது தெரியவந்தது. அவா்கள் ஆட்சியரை சந்தித்து வருத்தம் தெரிவித்த பின்னா், ஆட்சியரின் அறிவுறுத்தல்படி வாகனங்களுக்கு போடப்பட்ட பூட்டு அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT