கோயம்புத்தூர்

கருணாநிதி கல்லூரி- எல் & டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு

DIN

மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது தொடர்பாக கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி-எல் & டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் பி.இந்து முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் எல் & டி நிறுவன மேலாளர் வி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் நிறுவன பொறியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றம், ஆராய்ச்சிகள், பயிற்சிகள் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இன்றைய சூழலில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்கள் அவ்வப்போது, தெரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளைகளில் பயிற்சி எடுப்பது உதவியாக இருக்கும் என்றார். இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், எல் & டி நிறுவன மேலாளர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT