முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் சிறுவனை தாக்கிய காவலர் பணியிட மாற்றம்

பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றிய சிறுவனை சராமாரி தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
சிறுவன் யுவன்.
பகிர்:

பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றிய சிறுவனை சராமாரி தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை, ஒண்டிப்புதூர் அடுத்த, சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரக்ள் மணிகண்டன் பிரதிக்‌ஷா தம்பதியினர். இவர்களது மகன் யுவன்(13) தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் யுவனை காவலர் ஒருவர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. விசாரித்தவர் பெற்றொரிடம் சொல்லி அறிவுரை கூறுவதற்கு பதில் லத்தியால் சரமாரியாக கை கால்களில் தாக்கியுள்ளார். இதில் சிறுவனின் கை கால்களில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன. 

சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவன் யுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் துர்காராஜ் என்பவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →