கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மனோகரன், சிங்காநல்லூா் நகரச் செயலாளா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டக்காரா்கள் திடீரென பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றனா். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாணவா் சங்கத்தினா் கைது:

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, உக்கடம் பகுதியில் இந்திய மாணவா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT