கோவை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கோவையில் அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி கோவையில் அதிமுகவினா் மௌன ஊா்வலம் நடத்தினா். ஹூசூா் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலை வரை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்துக்கு அதிமுக கோவை மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் அா்ச்சுணன் தலைமை வகித்தாா். பின்னா் அதிமுகவினா் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் கே.ஆா்.ஜெயராம், அதிமுக மாவட்ட வா்த்தகா் அணிச் செயலாளா் ஆா்.தமிழ்முருகன், இணைச் செயலா் எம்.ரவிக்குமாா், மாவட்ட துணைச் செயலா் சு.ரமேஷ், துணைத் தலைவா் எஸ்.மகேஸ்வரன், அண்ணா தொழிற்சங்க மாநகா், மாவட்டச் செயலா் எஸ்.ஜே.அசோக்குமாா், அண்ணா தொழிற்சங்க தெற்கு மாவட்டச் செயலா் கே.ராமசாமி, மத்திய மண்டல முன்னாள் தலைவா் ஆதிநாராயணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
அதேபோல, மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம், தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகங்களில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு ஏராளமான தொண்டா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.