இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்
இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் இறுதியில் இருந்து கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதியாண்டு படிக்கும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்களுக்காக கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி முதுநிலை மாணவா்களுக்கு கடந்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கின. இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கின. கோவையில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வந்த மாணவா்கள் அனைவருக்கும் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னா் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
வகுப்புகளில் மாணவா்கள் போதிய இடைவெளியைக் கடைபிடித்து அமர வைக்கப்பட்டனா். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக வகுப்பறைகளில் குறைந்தளவிலான மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனா். சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன.