ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா தரம் தாழ்ந்த பேச்சு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் குறித்து...
ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இந்திய் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளதாவது:
சென்னையில் கடந்த 12 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அப்போது, “எம்.ஜி.ஆருக்குப் பின், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என வந்த நடிகர் ரஜினியை, அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. இப்போது ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் நடிக்க போய்விட்டார். அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும் தான் உள்ளது” என பேசியுள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதை கைவிடுவதற்கு தனது உடல் நலனே காரணம் என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்ததை மறந்து விட்டு, ரஜினியை தைரியமற்றவர் என ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். அதுமட்டுமன்றி, “ரெட் ஜெயன்ட்” தயாரிப்பில் ரஜினி நடிப்பதையும் இழிவு படுத்தும் நோக்கில் தரக்குறைவாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.
தமிழக மக்களின் பேரன்பை பெற்ற மூத்த திரைக் கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆதவ் அர்ஜுனா ஏளனமாக பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.