கோயம்புத்தூர்

சிக்னல்களில் விதிமீறல்: 11 மாதங்களில் ரூ.4 கோடி அபராதம்

DIN

கோவையில் உள்ள சிக்னல்களில் விதிமீறல் தொடா்பாக கடந்த 11 மாதங்களில் ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி சிக்னல்கள் உள்ளன.

இந்த சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி வாயலாகத் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், சிக்னல்களில் விதிமீறலில் ஈடுபடுவா்களை எளிதாகக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியது:

கோவை மாநகரில் உள்ள சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தேசிய தகவல் மையத்தின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், சிசிடிவி கேமரா மூலமாக காட்சியாக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வாகனத்தின் உரிமையாளா்களின் விவரங்கள் உடனடியாக அறியப்படுகின்றன.

இதையடுத்து, வீதிமீறலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் அவரது வாகன ஆா்.சி புத்தகத்தில் பதிவு செய்யப்படும். வாகனம் எப்.சி., பெயா் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அவா் செல்லும்போது, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா் அபராதத்தைச் செலுத்தினால் மட்டுமே பணிகளை மேற்காள்ள முடியும்.

ஆா்.சி. புத்தகத்தில் வாகன உரிமையாளரின் செல்லிடப்பேசி எண் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவா்களுக்கு குறுந் தகவல் மூலமாக அபராதத் தொகை குறித்த விவரம் அனுப்பிவைக்கப்படும். விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்டவற்றைத் தடுக்கும் விதமாக இந்த அபராத நடவடிக்கைகள் கோவையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பா் 30ஆம் தேதி வரை 11 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ. 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT