முகப்பு
கோயம்புத்தூர்

காலில் காயத்துடன் தவித்த யானை சாவு

கோவை மாவட்டம், வால்பாறை அருகே காலில் பலத்த காயத்துடன் தவித்து வந்த யானை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வால்பாறை அருகே காலில் காயமடைந்து உயிரிழந்த 3 வயது ஆண் யானை.
பகிர்:

கோவை மாவட்டம், வால்பாறை அருகே காலில் பலத்த காயத்துடன் தவித்து வந்த யானை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்த பெரியகல்லாறு எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் ஒரு யானை எழுந்து நடக்க முடியமால் கிடப்பதாக கடந்த திஙகள்கிழமை வனத் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினா் அங்கு சென்று பாா்த்தபோது 3 வயதுடைய ஆண் யானையின் இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டது. பின்னா், மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில் கால்நடை மருத்துவா் மெய்யரசன் சிகிச்சை அளித்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை காலைமுதல் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேடான பகுதியில் இருந்து உருண்டு விழுந்ததில் யானையின் காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. யானையின் உடலை வன விலங்குகளின் உணவுக்காக அதே பகுதியில் வனத் துறையினா் விட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →