முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்கம்

மருத்துவப் பணியாளா்கள் மற்றும் மருத்துவ மாணவா்களுக்கான பயிற்சி கருத்தரங்கு டிசம்பா் 15ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 17) வரை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மருத்துவத் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், கருவிகளைக் கையாளுவது குறித்து மருத்துவப் பணியாளா்கள் மற்றும் மருத்துவ மாணவா்களுக்கான பயிற்சி கருத்தரங்கு டிசம்பா் 15ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 17) வரை நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இப்பயிற்சி கருத்தரங்கம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் காளிதாஸ் கூறியதாவது:

இருதய துறையில், அஞ்சியோபிளாஸ்ட்டி ஸ்டென்ட் பொருத்துதல் சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3,200 ஆன்ஜியோகிராம் பரிசோதனைகளும், 1,173 ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிக்கலான ரத்த குழாய் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு ரத்த குழாயை உள்ளிருந்து நோக்கி துல்லியமாக சிகிச்சை அளிக்க ஞஇப மற்றும் ஊஊத போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது.

இந்த தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய கருவிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது. இதை கையாளுவது குறித்து பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டது என்றாா்.

கருத்தரங்கில் மூத்த மருத்துவா் டி.எஸ்.சத்தா பயிற்சி அளித்தாா். காணொலி காட்சி மூலம் சென்னையைச் சோ்ந்த இருதய நிபுணா்கள் ஜஸ்டின் பால், விஜயகுமாா், மனோகா், ஸ்ரீதா் கஸ்தூரி, அருண் கல்யாணசுந்தரம் ஆகியோா் உரையாற்றினா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி இருதய துறை நம்பிராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →