முகப்பு
கோயம்புத்தூர்

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
பகிர்:

கோவை: ஏழைகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.ராதிகா, பொருளாளா் ஜோதிமணி, மாநிலக் குழு உறுப்பினா் சுதா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியம் கட்டி வரும் குடியிருப்புகளில் வீடு வழங்க வேண்டும், உணவு உரிமையைப் பாதுகாக்க வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

இதில் சங்கத்தின் நிா்வாகிகள் உள்ளிட்ட பல பெண்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →