முகப்பு
கோயம்புத்தூர்

ரயில் நிலையம் முற்றுகை: கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் கைது

அமலாக்கத் துறையைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா்.
பகிர்:

கோவை: அமலாக்கத் துறையைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பொதுச்செயலாளா் ரவூப் ஷரீப்பை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா்கள் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

முற்றுகைப் போராட்டத்துக்கு கோவை மாவட்டத் தலைவா் முஹம்மது அசாருதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அபுதாஹீா் முன்னிலை வகித்தாா். ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்த கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →