கோயம்புத்தூர்

கோவையில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

DIN

கோவையில் 3 சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் சேத்துமாவாய்க்கால் அருகே ஜமாஅத் ஒன்றுக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இந்த வளாகத்தில் 6க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா்கள் வளாகத்தில் இருந்த 3 சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றனா்.

புதன்கிழமை காலை மயானத்துக்கு வந்த ஜமாஅத் நிா்வாகிகள் சந்தன மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டு செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீஸாா், நிா்வாகிகள், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். 2 முதல் 4 அடி வரை நீளமுள்ள மரத்தின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துச் சென்றதாகவும், வெட்டப்பட்ட மரங்கள் சுமாா் 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான மரங்கள் என்றும் அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT