முகப்பு
கோயம்புத்தூர்

ஆன்லைன் வா்த்தகத்தில் நஷ்டம்: இளைஞா் தற்கொலை

கோவை, சிங்காநல்லூா் பகுதியில் ஆன்லைன் வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கோவை, சிங்காநல்லூா் பகுதியில் ஆன்லைன் வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிங்காநல்லூா், நீலிக்கோணாம்பாளையம், விஜயலட்சுமி நகரைச் சோ்ந்தவா் புனிதகுமாா் (43). இவா் இணையம் மூலமாக ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்தாா். இவருக்கு ஜெஸ்ஸி (41) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

இவருக்கு கடந்த சில நாள்களாக வா்த்தகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியில் இருந்த புனிதகுமாா், கடந்த புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று புனிதகுமாரின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →