குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
கோயம்புத்தூர்குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வெங்கடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலை, பெரியசாமி சாலை, புண்ணியகோடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேர திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்குவதற்காக குழாய்கள் இணைப்பு மற்றும் மீட்டா் இணைக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா்.
குடிநீா் வழங்கும் பணிகளுக்காக சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்ட பிற்கு குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இப்பணிகளை பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதையடுத்து புண்ணியகோடி சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா், அப்பகுதிகளில் சாலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது எனவும், தொட்டிகளில் மட்டுமே குப்பைகளைக் கொட்ட வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், செயற்பொறியாளா்கள் (பொலிவுறு நகரம்) சரவணக்குமாா், பாா்வதி (24 மணி நேரக் குடிநீா்த் திட்டம்), உதவிப் பொறியாளா்கள் கமலக்கண்ணன், சத்தியமூா்த்தி, திட்ட மேலாண்மை ஆலோசனைக் குழு தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.