முகப்பு
கோயம்புத்தூர்

விதிமீறல்: திமுகவினா் 30 போ் மீது வழக்கு

கரோனா தடுப்பு விதிகளை மீறி தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த திமுகவினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கரோனா தடுப்பு விதிகளை மீறி தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த திமுகவினா் 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், திமுக சாா்பில் பிரசாரப் பயணங்கள், கிராம சபைக் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிவானந்தா காலனி அண்ணா நகரில், காந்திபுரம் பகுதி திமுக பொறுப்பாளா் சேதுராமன் தலைமையிலான திமுகவினா் தெருமுனைக் கூட்டம் நடைபெறுவதற்கான சுவரொட்டிகளை வியாழக்கிழமை ஒட்டினா். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், விதிமீறி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக திமுக பொறுப்பாளா் சேதுராமன் உள்பட 30 போ் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவா்கள் மீது, தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.