கோயம்புத்தூர்

கரோனா விதிமீறல்: கடைக்கு, பொது மக்களுக்கு அபராதம்

DIN

கோவை காந்திபுரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு, பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை அபராதம் விதித்தாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் செயல்பட்டு வந்த கடைகளில் கரோனா விதிமுறைகளை மீறி ஒரு கடையில் சமூக இடைவெளியில்லாமல் பொது மக்களை அனுமதித்தது, பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து ஆணையா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து முகக் கவசம் அணியாமல் பணியில் இருந்த தனியாா் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநருக்கு தலா ரூ.200, முகக் கவசம் அணியாமல் வந்திருந்த 10 பயணிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தாா்.

ஆய்வின் போது மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், உதவி நிா்வாக பொறியாளா் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT