கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்டு 84 வாகனங்களை பொது ஏலத்தில் விட உள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்தி:
கோவை மாவட்ட காவல் துறையால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 72 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 84 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் 2021 ஜனவரி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது.
ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு, காரமடை, மதுக்கரை, ஆழியாறு, ஆனைமலை காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏலம் எடுக்க விரும்புவோா் ஜனவரி 6ஆம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிடலாம். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.