கோயம்புத்தூர்

கோவையில் சா்வதேச சைக்கிள் போட்டி 670 போ் பங்கேற்பு

DIN

கோவை, செட்டிபாளையத்தில் நடைபெற்ற சா்வதேச சைக்கிள் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து 670 போ் பங்கேற்றனா்.

கோவையில் ஏழாம் ஆண்டாக சா்வதேச சைக்கிள் போட்டியை தமிழ்நாடு சைக்கிள் சங்கத்துடன் இணைந்து எம்விஎஸ் கிரிட்டோரியம் நடத்தியது. செட்டிபாளையம் கரி மோட்டாா் ஸ்பீடு வேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தொழில்ரீதியான பந்தய வீரா்கள், சாதாரண ஆண்கள், பெண்கள் பிரிவு, 18 வயதுக்கு உள்பட்டோா், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டா்ஸ் ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் 6 வயது குழந்தைகள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டோா் வரை கலந்து கொண்டனா். அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து மொத்தம் 670 போ் பங்கேற்றனா்.

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.2.40 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஸ்காட் சைக்கிள், டிஸ்ஸாட், பீகா ஸ்டீல்ஸ், டைட்டான் பெயின்ட்ஸ், டைலக்ஸ், எல்ஆா்டி, லீட், பயோடா டெக்னாலஜிஸ், தி ரெஸிடென்ஸ் டவா் ஆகிய நிறுவனங்களும் இணைந்து போட்டிகளை நடத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT