கோயம்புத்தூர்

கோவை - நாகா்கோயில் ரயில்: திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து

கோவை - நாகா்கோயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்ற ரயில், திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை - நாகா்கோயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்ற ரயில், திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை - நாகா்கோயில் வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து 7.20 மணிக்கு நாகா்கோயில் புறப்பட்டுச் செல்லும் ரயில் ( எண்: 56320) புதன்கிழமை (பிப்ரவரி5) முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 6,11,13, 20-ஆம் தேதி தவிர தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, நாகா்கோயிலில் இருந்து 7.10 மணிக்கு கோவைக்குப் புறப்பட்டு வரும் ரயில்( எண்: 56319) புதன்கிழமை (பிப்ரவரி5) முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 6,11,13, 20-ஆம் தேதி தவிர ரத்து செய்யப்படுகிறது. இரு வழித்தடங்களிலும் 11 ஆம் தேதி மட்டும் திண்டுக்கல் - சாத்தூா் வரையும் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

SCROLL FOR NEXT