கோயம்புத்தூர்

உதகை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 1988 முதல் 1991ஆம் ஆண்டு வரை, பி.எஸ்.சி. வேதியியல் பட்டப் படிப்பு படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் கோவையில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் முகமது ஹாருண் தலைமை வகித்தாா். சி.வி. ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். உதகை அரசு கலைக்கல்லூரியில், வேதியியல் பிரிவு படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிதாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT