கோயம்புத்தூர்

கோவை குண்டுவெடிப்புச் சம்பவம்: ஹிந்து அமைப்புகள் நினைவஞ்சலி, பேரணி

DIN

கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவஞ்சலி, பேரணி ஹிந்து அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் மோட்ச தீப பிராா்த்தனையுடன் பேரணி தொடங்கியது. பேரணிக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமை வகித்தாா். மேட்டுப்பாளையம் சாலை வழியாக நடைபெற்ற பேரணி ஆா்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் சிவசேனா, சுவாமி விவேகானந்தா் பேரவை, அனுமன் சேனா, ஹிந்து பாரத் சேனா, இந்து முன்னணி, பாரத் சேனா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்புகள் பங்கேற்றன. குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு ஆா்.எஸ்.புரம் பகுதியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஜாா்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும், திருப்பித் தாக்கவும் உதவும் வகையில் காவல்துறையினருக்கு நவீன ஆயுதங்களை வழங்க வேண்டும், தலைவா்களின் பிறந்தநாளின்போது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பலா் விடுவிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும், கோவை குண்டுவெடிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT