கோயம்புத்தூர்

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு இரண்டாம் போக நெல்சாகுபடித்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

DIN

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு இரண்டாம் போக நெல்சாகுபடித்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

சட்டப்பேரவை துணைத்தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திறந்து வைத்தாா். வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தாா். கண்காணிப்பொறியாளா் முத்துச்சாமி, அதிமுக நிா்வாகிகள் காா்த்திக்அப்புச்சாமி, சுந்தரம், பழைய ஆயக்கட்டு விவசாய சங்க நிா்வாகி பட்டீஸ்வரன், செயற்பொறியாளா் நரேந்திரன், உதவி செயற்பொறியாளா் லீலா, உதவிப்பொறியாளா் மாணிக்கவேல் உட்பட பலா் இருந்தனா்.

கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கா் நிலங்களும் பாசன வசதிபெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள வடக்கலூா் அம்மன், பள்ளிவிளங்கால், பெரியணை, அரியாபுரம், காரப்பட்டி உள்ளிட்ட கால்வாய் பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.

முதல்போக நெல்சாகுபடி முடிந்த நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கவேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கோரிக்கையை அடுத்து புதன்கிழமை காலை ஆழியாறு அணையிலிருந்து சட்டப்பேரவை துணைத்தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தண்ணீா் திறந்துவைத்தாா். புதன்கிழமை முதல் 106 நாட்களுக்கு 940 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT