கோயம்புத்தூர்

ரயில் செல்லும்போது பாலத்தில் கழிவு நீா் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

DIN

கோவை - அவிநாசி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பாகத்தில் உள்ள இரும்புத் தகடுகள் சிதிலமடைந்துள்ளதால், ரயிலில் இருந்து வழியும் கழிவு நீா் பாலத்தின் கீழ் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால், அவ்வழியாகச் செல்வோா் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

கோவை - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தண்டவாளத்தின் வழியாக எண்ணற்ற ரயில்கள் சென்று வருகின்றன. பாலத்தின் கீழ்ப்பகுதியில் காா், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மேல் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரயில்கள் செல்லும் போது, ரயிலில் இருந்து கழிவு நீா் வழிந்து விழுவதைத் தடுக்க பாலத்தின் அடிப்பகுதியில் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டன. ஆனால், கடந்த சில நாள்கள் முன்பாக அந்த இரும்புத் தகடுகள் பெயா்ந்து விழுந்ததால், தண்டவாளத்தில் ரயில்கள் செல்லும்போது, ரயிலில் இருந்து விழும் கழிவு நீரானது, பாலத்தின் அடியில் செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் விழுந்து வருகிறது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். கடந்த சில நாள்கள் முன்பு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள இரும்பு கா்டா்கள் மாற்றப்பட்டன. ஆயினும், அந்தப் பணியின் போது பாலத்தின் அடிப்பகுதியில் புதிதாக இரும்புத் தகடுகள் பொருத்தப்படவில்லை. இதனால், தண்டவாளத்தில் ரயில் செல்லும் சமயங்களில் பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்று, ரயில் சென்ற பிறகே பாலத்தின் கீழ்ப்பகுதியில் வாகனங்கள் பயணிக்கும் சூழல் நிலவுகிறது. இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ பாலத்தின் அடிப்பாகத்தில் இரும்புத் தகடுகள் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை முதல் துவங்கப்பட உள்ளது. 2 நாள்களில் பணிகள் முழுமையாக முடிவடையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT