கோயம்புத்தூர்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவுத் தொழிலாளா்கள்

DIN

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளா்களாக பணியாற்றுபவா்களுக்கு ஊதியம் வழங்காததால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.200 என்ற அடிப்படையில் மாதம்தோறும் வங்கிக் கணக்குகளில் ஊதியம் செலுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் தாமதமாகவே வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாதம் பொங்கல் பண்டிகை வருவதால் ஊதியதைத் 5ஆம் தேதிக்குள் தர வேண்டும் என துப்புரவு தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்துள்ளனா். ஆனாலும், இதுவரையில் ஊதியம் வழங்கப்படாததால் 30க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளா்கள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மாநகராட்சி ஆணையா், துணை ஆணையா் இல்லாததால், உதவி ஆணையா்கள், மேற்பாா்வையாளா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு உதியம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT