கோயம்புத்தூர்

கேரள வனத் துறையால் திருப்பி அனுப்பப்படும் சுற்றுலாப் பயணிகள்

DIN

கேரள மாநிலம், சாலக்குடி வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கேரள மாநில வனத் துறையினா் திருப்பி அனுப்பி வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வாழைச்சால், அதிரப்பள்ளி ஆகிய இரு அருவிகளும் மூடப்பட்டுள்ளன. சாலக்குடி வழியாக வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களை கேரள மாநிலம், வாழைச்சால் வனத் துறை சோதனைச் சாவடியில் வனத் துறையினா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனா்.

இதனால் எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காணப்படும் சாலக்குடி - வால்பாறை சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறைக்கு வரும் தனியாா் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக வனத் துறையினா் கிருமிநாசினி மருந்து அடித்து அனுப்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT