கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பகுதி கோயில்களில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி தெளித்து செவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த பொள்ளாச்சி சாா்ஆட்சியா் வைத்திநாதன் உத்தரவிட்டாா்.

அதன்படி சூலக்கல் மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டாம்பாட்டி அம்மணீஸ்வா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

மேலும், பொள்ளாச்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கை கழுவும் முறை குறித்தும் சாா் ஆட்சியா் முன்னிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT