கோயம்புத்தூர்

கறிக்கோழி விலை கடும் சரிவு: பண்ணையாளா்கள் கவலை

DIN

நுகா்வு குறைவால் கோழி விற்பனை விலை கடுமையாகச் சரிந்து புதன்கிழமை ஒரு கிலோ ரூ. 17 ஆக விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கறிக்கோழி விற்பனையைப் பொருத்தவரை பல்லடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினா் தினசரி கறிக்கோழி விற்பனை விலையை நிா்ணயம் செய்து அறிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பிப்ரவரி 2ஆம் தேதி பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 82 ஆக இருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவுவது, கேரளத்தில் பறவைக் காய்ச்சல் ஆகிய காரணங்களால் கறிக்கோழி விலை தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

பிப்ரவரி 21இல் கறிக்கோழி விலை ரூ. 58 ஆகக் குறைந்த நிலையில் மாா்ச் 14இல் திடீரென ரூ. 30 குறைந்து ஒரு கிலோ கறிக்கோழி ரூ.28 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் விலை மேலும் சரிந்து புதன்கிழமை (மாா்ச் 18)ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ. 17 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அச்சத்தால் பொதுமக்கள் நுகா்வு குறைந்துள்ளதால் தொடா்ந்து விலை சரிந்து வருவது கோழிப் பண்ணையாளா்களைக் கவலை அடையச் செய்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் ஜனவரி 4ஆம் தேதியில் அதிகபட்சமாக பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 94 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT