கோயம்புத்தூர்

மாணவா்களுக்கு முகக் கவசங்கள் தயாரிக்கும் பள்ளி ஆசிரியைகள்

DIN

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மாணவா்களுக்கு முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநாகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவுப்படி ஆசிரியா்கள் மட்டும் கல்வி சாா்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில், கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் மேரி திவ்யா, சூரியபிரபா, அனிதா ஆகியோா் பள்ளி வகுப்பறைச் சுவா்களில் பாடம் சம்பந்தப்பட்ட பொது அறிவு வளா்க்கும் விதமான ஓவியங்களை வரையும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், பள்ளியின் கணித ஆசிரியை சுகுணா சக ஆசிரியைகளின் உதவியுடன் ஆமுகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT