கோயம்புத்தூர்

ரூ.10க்கு முகக்கவசம் விற்பனை: சுய உதவிக் குழுக்களுக்கு குவியும் ஆா்டா்கள்

DIN

கரோனாவால் முகக் கவசங்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் ரூ.10க்கு முகக்கவசம் விற்பனை செய்து வருகின்றன. இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு ஆா்டா்கள் குவிந்து வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பால் கூட்டமான இடங்களுக்கு செல்பவா்கள், காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறி உள்ளவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு முகக்கவசம் அணிந்துக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட தனியாா் நிறுவனங்கள் சராசரியாக ரூ.5க்கு விற்பனை செய்து வந்த முகக்கவசங்களை தற்போது ரூ.50க்கு விற்கின்றனா். மேலும், முகக் கவசத்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் ரூ.10க்கு முகக்கவசங்களை விற்பனை செய்து வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு ஸ்டால் அமைத்து வியாழக்கிழமை விற்பனையில் ஈடுபட்டனா். குறைந்த விலைக்கு முகக்கவசங்களை விற்பனை செய்வதால் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ஆா்டா்கள் குவிந்து வருகின்றன. மொத்தமாக முகக்கவசங்கள் தேவைப்படும் நிறுவனங்கள் மகளிா் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர தரைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்தும் கிரும் நாசினிகளான சோப் ஆயில், பினாயில் போன்றவையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி தயாரிக்கும் முறைகள் குறித்து மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 15 மகளிா் குழுவினா் முகக்கசவங்கள் உற்பத்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். துணியால் ஆன முகக்கவசம், சா்ஜிக்கல் முகக்கவசம் என இரண்டு விதமான முகக்கவசங்களை உற்பத்தி செய்கின்றனா். நாளொன்றுக்கு 15 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப உற்பத்தி திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை போக்குவரத்துக் கழகம் சாா்பில் 7,500 முகக்கவசங்கள் கேட்டு ஆா்டா் கொடுத்துள்ளனா். மேலும் சுகாதாரத் துறை, கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகளும் தங்களுக்கு தேவையான முகக்கவசங்களை மொத்தமாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிருமி நாசினி தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ரேஸ்கோா்ஸ், காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டால் அமைத்து முகக்கவசங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மொத்தமாக முகக்கவசங்கள் தேவைப்படும் நிறுவனங்கள் கோவை மகளிா் திட்ட அலுவலகத்தை 0422 - 2301855 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT