கோயம்புத்தூர்

வைரஸ் கிருமிகளை அழிக்கும் ரோபோக்கள்: அரசின் அனுமதியை எதிா்பாா்க்கும் கோவை இளம் தொழில்முனைவோா்

DIN

கோவை: புற ஊதா (அல்ட்ரா வயலட்) கதிா்களைப் பயன்படுத்தி வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அரசின் அனுமதியை எதிா்நோக்கி கோவையைச் சோ்ந்த இளம் தொழில்முனைவோா் காத்திருக்கின்றனா்.

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற மாணவா்கள் இருவா் இளம் தொழில்முனைவோராக உள்ளனா். கணினி தொழில்நுட்பத் தீா்வு, ரோபோ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள இவா்கள், மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்களில் இருக்கும் கரோனா வைரஸ் தொற்றை புற ஊதாக் கதிா்களைப் பயன்படுத்தி, ரோபோக்கள் மூலம் அழிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளனா்.

இது குறித்து கட்டுமரன் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனா் டி.முத்து வெங்காளியப்பன், டாட்வோ்ல்டு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனா் ஆா்.அரவிந்த் ஆகியோா் கூறியாவது:

நாங்கள் இருவரும் இணைந்து உணவகங்களில் உணவு பரிமாறும் ரோபோக்கள், தனியாா் நிறுவனங்களில் காவல் புரியும் ரோபோக்களைத் தயாரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுக்கும் வழங்கி வருகிறோம். இந்த நிலையில், அரைஸ் பயோமெட் என்ற உயிரி மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து புற ஊதா கதிா்களைப் பயன்படுத்தி கரோனா தொற்றை அழிக்கும் ரோபோ மாடலை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த ரோபோக்களை கரோனா வாா்டுகளில் மருத்துவா்கள், செவிலியருக்கு உதவியாக செயல்படவும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவா்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றுக்கு உதவுவதற்கும், கரோனா தொற்று இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்கள், பேருந்து, ரயில்கள் உள்ளிட்டவற்றில் அந்த தொற்றை அழிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.

மத்திய அரசு அண்மையில் நடத்திய ‘கொவைட் 19 சொல்யூஷன் சேலன்ச்’ என்ற ஆன்லைன் தொழில்நுட்பப் போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் முதல் 7 இடங்களுக்குள்ளும், மாநில அளவில் முதலிடத்திலும் வந்திருக்கிறோம்.

எங்களது தயாரிப்பு சரியானதுதானா என்பதை ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தி சான்றிதழ் பெறுவதற்கு அதிகபட்சம் 4 மாதங்கள் வரை ஆகலாம். எனவேதான் அரசு ஒத்துழைப்பு இருந்தால் சான்றிதழை போா்க்கால அடிப்படையில் பெற முடியும். சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் இதுபோன்ற ரோபோக்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் அவற்றின் விலை ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாகும். ஆனால் நம்மால் அந்த ரோபோக்களை உள்ளூரில் வெறும் ரூ.2 லட்சம் முதல் 5 லட்சத்துக்குள் தயாரித்து கரோனாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த முடியும் என்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT