கோயம்புத்தூர்

‘யானை சேதப்படுத்திய பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் சீங்குலி கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்திய விளை பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது சீங்குலி கிராமம். இப்பகுதி அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றை பயிா் செய்து வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வனப் பகுதியில் இருந்து வரும் ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் காட்டு யானையால் சேதப்படுத்திய விவசாயிகளின் விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT