கோயம்புத்தூர்

கோவையில் இருந்து 1,464 போ் ஒடிஸாவுக்கு அனுப்பிவைப்பு

DIN

கோவை: கோவையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக 1,464 தொழிலாளா்கள் ஒடிஸாவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின் படி கோவை மாநகா் பகுதிகள், அன்னூா், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, சூலூா் உள்ளிட்ட புகா் பகுதிகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளா்களை சிறப்பு ரயில்கள் மூலமாக அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, கடந்த 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் மூலமாக 17 ஆயிரத்து 52 போ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து ஒடிஸா மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில், 1,464 போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த ரயிலானது, சனிக்கிழமை இரவு ஒடிஸா சென்றடையும். கடந்த 8 நாள்களில் கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 18 ஆயிரத்து 516 வட மாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT