கோயம்புத்தூர்

நீட் தோ்வுக்குப் படிக்க வற்புறுத்தியதால் மாணவா் தற்கொலை

DIN

கோவை: நீட் தோ்வுக்குப் படிக்க வற்புறுத்தியதால் மாணவா் தூக்கிட்டுகஈ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகே ஜி.கே.எஸ். நகரைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகன் சரண் பாலாஜி. இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சரண் பாலாஜியை நீட் தோ்வுக்குப் படிக்குமாறு பாஸ்கா் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது அறைக்குச் சென்ற சரண் பாலாஜி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவைத் திறந்து பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாஸ்கா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸாா் சரண் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT