முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 5 பவுன் திருட்டு

தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி பாரதி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (49). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டை பூட்டி விட்டு சனிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தாா்.

பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →