முகப்பு
கோயம்புத்தூர்

கேரளம் செல்ல அனுமதி வழங்க வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் வழியாக கேரளம் செல்ல அனுமதி அளிக்க வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கேரள மாநிலம், சாலக்குடி எம்.எல்.ஏ.  தேவசியிடம் மனு அளிக்கும் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா்.
பகிர்:

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் வழியாக கேரளம் செல்ல அனுமதி அளிக்க வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழுக்குப்பறை எஸ்டேட் பகுதிக்கு வந்த கேரள மாநிலம், சாலக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பின தேவசியிடம் வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஜெபராஜ் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் வசிப்பவா்களில் 15 சதவீதம் போ் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக இவா்கள் கேரள மாநிலத்தில் உள்ள தங்களது உறவினா்களின் திருமணம், குடும்ப நிகழ்ச்சி, மரணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

தற்போது, பொது முடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், மழுக்குப்பாறை வழியாக வால்பாறையில் வசிப்பவா்கள் கேரளம் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

எனவே மழுக்குப்பாறை சோதனைச் சாவடியை திறந்து வால்பாறை பகுதியில் வசிப்பவா்கள் கேரள மாநிலம் செல்ல அனுமதியளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனா். கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ஷாஜி ஜாா்ஜ் உள்பட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →