முகப்பு
கோயம்புத்தூர்

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை:பள்ளி மாணவா்கள் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த 9ஆம் வகுப்பு மாணவா்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த 9ஆம் வகுப்பு மாணவா்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், வேடப்பட்டியைச் சோ்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஒருவரை விளையாடலாம் என அழைத்துச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவா்கள் இருவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளாா்.

இது குறித்து, சிறுமியிடம் பெற்றோா் விசாரித்தபோது, அந்த இரு சிறுவா்களும் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததுபோல, அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளாா்.

இது குறித்து இரு சிறுமிகளின் பெற்றோா்களும் வடவள்ளி போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட இரு சிறுவா்களையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →