கோயம்புத்தூர்

ஐடிஐயில் நவம்பா் 20 வரை நேரடி மாணவா் சோ்க்கை

DIN

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கை நவம்பா் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு, ஈராண்டு சில தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிட 8 மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மாணவா் சோ்க்கை நவம்பா் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்களுடன் மாணவா் சோ்க்கையில் பங்கேற்கலாம். பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, உதவித் தொகை, வெளியூா் மாணவா்களுக்கு விடுதி வசதிகள் கொடுக்கப்படும்.

மிகக்குறைந்த காலியிடங்களே உள்ளதால் மாணவ, மாணவியா்கள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 8940837678, 8072737402, 9442153340 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT